தெருவில் கிடந்த 23 பவுன் நகையை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த முதியவர்

தெருவில் கிடந்த 23 பவுன் நகையை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த முதியவர்

Update: 2022-11-21 18:51 GMT

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சின்னச்சாமி. இவர் 23 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் முன் வைப்பு தொகைக்கான ரசீது ஆகியவற்றை துணிப்பையில் வைத்து கொண்டு வங்கி லாக்கரில் வைப்பதற்காக இருசக்கர வாகனம் மூலம் உசிலம்பட்டி வந்தார். இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு வரப்பட்ட துணிப்பை பழைய தபால் அலுவலக தெருவில் கீழே தவறி விழுந்தது. இந்நிலையில் அவ்வழியாக வந்த நாகராஜ் என்பவர் துணிப்பையை கீேழ கிடப்பதை பார்த்துள்ளார். அதில் இருந்த மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புத்தகத்தை அடையாளமாக கொண்டு கூட்டுறவு வங்கி வந்து வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் 23 பவுன் நகை மற்றும் பாண்ட் ரசீதை ஒப்படைத்தார். வங்கி மேலாளர் சிவக்குமார், நகையை தவறவிட்டு தேடிக் கொண்டிருந்தவருமான சின்னச்சாமியை அழைத்து அவரிடம் நகை மற்றும் பாண்ட் ரசீதை ஒப்படைத்தார். கீழே கிடந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்திற்கான ரசீதை வங்கியின் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த முதியவர் நாகராைஜ பலரும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்