5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-12-19 17:39 GMT

திருப்பத்தூர் அருகேஉள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 60). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலிபதொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வந்து தனது தாயிடம் தெரிவித்தாள்.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆரோக்கியதாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் திருப் பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ஆரோக்கியதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்