திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை - வாலிபர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே வீட்டு வேலைக்கு சேர்ந்த முதியவருக்கு அடி-உதை விழுந்தது.;

Update: 2022-11-20 14:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு கிராமம், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் குப்பன். அவரது மகள் சிவகாமி. பேரன் சூர்யா(வயது19). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வந்த சொக்கலிங்கம் (82) இவர்களுடைய வீட்டிலேயே தங்கி ஆடு, மாடு மேய்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

குப்பன் குடும்பத்தினர் சொக்கலிங்கத்திற்கு தினந்தோறும் சரியான உணவு வழங்கமால் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த சொக்கலிங்கம் சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதியவரை தாக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து திருக்கழுக்குன்றம் போலீசார் முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.

மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்