மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு

மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு

Update: 2022-07-11 18:32 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

மண்எண்ணெய் பாட்டிலுடன்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதியவர் ஒருவர் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக முதியவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் முதியவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பின்னத்தூர் எடையர்காடு பகுதியை சேர்ந்த கோதண்டராமன் (வயது 71) என்பது தெரியவந்தது. தனது வீட்டில் இருந்து எடையர்காடு வரும் பாதையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தென்னங் கன்றுகளை நட்டு ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த முதியவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்