முதியவரை ஏமாற்றி ரூ.1 லட்சம் பறிப்பு
கழுத்தில் புழு கிடப்பதாக கூறி முதியவரை ஏமாற்றி ரூ.1 லட்சம் பறித்து விட்டு தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கழுத்தில் புழு கிடப்பதாக கூறி முதியவரை ஏமாற்றி ரூ.1 லட்சம் பறித்து விட்டு தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரூ.1 லட்சம் பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலகளத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்தை எடுத்து மஞ்சப்பை ஒன்றில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முதியவரிடம், உங்கள் கழுத்துப்பகுதியில் அரிப்பு புழு இருக்கிறது என்று கூறி உள்ளனர், இதனால் பதற்றம் அடைந்த மாரிமுத்து அருகில் இருந்த குழாயுடன் கூடிய பிளாஸ்டிக் தொட்டி பகுதியில் தான் கொண்டு வந்த பணத்துடன் கூடிய மஞ்சப்பையை வைத்துள்ளார்.
இதை நோட்டமிட்ட மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அந்த மஞ்சள் பையை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். திருடன், திருடன் என அவர் சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் மாயமாக மறைந்து விட்டார்கள்.
வலைவீச்சு
இது குறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ேமாட்டார் சைக்கிளில் பணத்தை எடுத்துச் சென்ற வாலிபர்கள் தங்கள் முகம் தெரியாமல் இருக்க இருவரும் ஹெல்மெட் அணிந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கியில் இருந்து பணத்தை எடுத்து விட்டு வந்த முதியவரிடம் நூதன முறையில் பணம் பறித்து சென்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.