கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற முதியவர் கைது
பேரளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
பேரளம் அருகே உள்ள மேலதென்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் பூசாரியாக பிரவின்குமார் உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை சென்றபோது கோவில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர் உள்ளே ெசன்று பார்த்த போது உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணம் திருட முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றதாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த கலைஅழகன் (வயது 64) என்பவரை கைது செய்தனர்.