100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய முதியவர் கைது
100 கிலோ ரேஷன் அரிசி கடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், புதுகோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கடாளிபட்டிசத்திரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் புதூரை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 60) என்பவர் 100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணராஜை கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.