திருத்தங்கலில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-08 23:18 GMT

சிவகாசி,An old man was arrested for selling lottery tickets in Thiruthangal

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முதியவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுக்கிரவார்பட்டி ரோட்டை சேர்ந்த வேல்சாமி (வயது 69) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,450 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்