கோவில் வளாகத்தில் பிணமாக கிடந்த முதியவர்

திசையன்விளை அருகே கோவில் வளாகத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.;

Update: 2022-12-26 20:28 GMT

திசையன்விளை:

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக திசையன்விளை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் அயூப்கான் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவர் காவி வேட்டியும், வெளிர் பச்சைநிறத்தில் அரை கை சட்டையும் அணிந்திருந்தார். கலர் பூபோட்ட கம்பளி போர்வை போர்த்தி இருந்தார்.

பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்