கிணற்றில் பிணமாக கிடந்த முதியவர்

ஆம்பூரில் முதியவர் ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-07-03 14:29 GMT

ஆம்பூர் நகரம் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 70). இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூர்த்தி பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து மூர்த்தி உடலை மீடடு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்