மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர்
ஆறுமுகநேரி அருகே மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே பேயன்விளை புதூர் பகுதியில் சுடுகாட்டு பாதையில் உள்ள ஆலமரத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
இதுபற்றி அறிந்த காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அலுவலர் மோகன் பிரபாகர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.