ஓடும் ரெயிலில் ஏறியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த முதியவர்

காட்பாடியில் ஓடும் ரெயிலில் ஏறியபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிர்தப்பினார்.

Update: 2023-07-31 18:43 GMT

அசாம் மாநிலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணி ஒருவர் ரெயிலில் இருந்து இறங்கி தின்பண்டங்களை வாங்கினார். சிறிதுநேரத்தில் ரெயில் புறப்பட்டது. இதைக்கண்ட அந்த பயணி வேகமாக ஓடிவந்து ரெயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் தவறி பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கும் இடையில் விழுந்து விட்டார். இதைக்கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தவறி விழுந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பூதேஸ்வரதட்டு (வயது 60) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் காட்பாடி ரெயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்