ஆரல்வாய்மொழி சாலையில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

ஆரல்வாய்மொழி சாலையில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2023-04-02 20:32 GMT

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 70). தச்சு தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். மகன் சுரேஷ் நாகர்கோவிலில் உள்ளார்.

ராஜமாணிக்கம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி இருந்தார். அவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சில தினங்களுக்கு முன் காப்பகத்தைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆரல்வாய்மொழியில் சாலையில் நடந்து சென்ற ராஜமாணிக்கம் திடீரென்று மயங்கி விழுந்தார் சில மணிநேரத்துக்கு பின் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து பார்த்தபோது ராஜமாணிக்கம் இறந்தது தெரிய வந்தது. கடும் வெயிலால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அவருடைய மகன் மற்றும் உறவினர் வந்து ராஜமாணிக்கத்தின் உடலை பெற்று சென்றனர். 

மேலும் செய்திகள்