விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2023-06-12 20:03 GMT

முக்கூடல்:

முக்கூடல் சுப்பையா தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 72). இவர் இலந்தைகுளத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இலந்தைகுளம் சுடுகாடு அருகே சென்ற போது, எதிரே மினி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மொபட்-மினி பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தர்ராஜ் பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்