தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் பலி

குளச்சல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் பலி;

Update: 2023-01-14 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் மந்திவிளையை சேர்ந்தவர் ராஜையன் (வயது76). இவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் நேற்று காலையில் ராஜையன் வீட்டுமுன் உள்ள தண்ணீர் தொட்டியில் கவிழ்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் நள்ளிரவு வேளையில் வெளியே வந்த போது தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் ஜெயசீலன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்