வெயிலுக்கு சுருண்டு விழுந்து முதியவர் பலி
வெயிலுக்கு சுருண்டு விழுந்து முதியவர் பலியானார்.
வெயிலுக்கு சுருண்டு விழுந்து முதியவர் பலியானார்.
கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. காலை 9 மணிக்கே உச்சி வெயில் போன்று கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி 100 நாள் வேலைக்கும், மகன் வெங்கடேசன் கூலி வேலைக்கும் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் பகல் 12 மணியளவில் தனது வீட்டில் யாருமில்லாத நிலையில் கண்ணன் கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடந்து சென்றார்.அப்போது வலது காலில் கொப்புளம் ஏற்பட்டு தோல் கருகி சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை என கூறப்படுகிறது.
சற்று நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் முதியவர் கண்ணன் காலில் கொப்பளத்துடன் சுருண்டு விழுந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த பல்லல குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.