கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
சுரண்டை அருகே கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 60). இவர் அங்கு டீக்கடை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திருமலைசாமி ஊருக்கு வடபுறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விரைந்து சென்றார். திருமலைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.