கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி நடந்தது.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஏ.டி.எம். மகளிர் கல்லூரி வரலாற்று துறை மற்றும் அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆகியவை சார்பில் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கல்லூரி வரலாற்று துறை தலைவர் அலமேலு தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் அன்பரசி, மாலா, தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்கள் சிவகுமார், மருது பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு, கல்லூரி மாணவிகளுக்கு மரபு நடை மற்றும் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சிகளை அளித்தனர். இதில் வணிக துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.