இலங்கை கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி -வைகோ வலியுறுத்தல்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்திற்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

Update: 2023-10-19 18:42 GMT

சென்னை,

இந்திய மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை நடத்துவது 6-வது முறையாக நடந்திருக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.

மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளே வந்து தாக்குதல் நடத்துவதையும் நமது மீனவர்களை கைது செய்வதையும் தடுக்க முயற்சிக்கவில்லை. கடந்த 14-ந்தேதி தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்து அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறித்துச்சென்றுள்ளது.

முற்றுப்புள்ளி

இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது மீன்பிடி படகுகளை திரும்பப்பெறவும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்