சீரமைப்பு பணியின் ேபாது மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி
சீரமைப்பு பணியின் போது மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார்:
சீரமைப்பு பணியின் போது மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
மதுரையில் வேலை
திருவட்டாரை அடுத்த அருவிக்கரையை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ஷாஜி (வயது35). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ஷாஜி மதுரை மேலூரில் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் மேலூர் பகுதியில் உள்ள ஒரு கம்பத்தில் ஏறி மின் கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஷாஜி கீழே விழுந்தார்.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த ஷாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. இதை அறிந்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்தநிலையில் ஷாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் நேற்று சொந்த ஊருக்கு ெகாண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மிகுந்த சோகம் ஏற்பட்டது.