சங்ககிரி:-
சேலம் ஜங்சன் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர், சங்ககிரி பகுதியில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வைகுந்தம் சுங்கச்சாவடி அருகில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது வினோத்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வினோத்குமார் படுகாயம் அடைந்தார். அவரை ஆம்புலன்சு மூலம் மகுடஞ்சாவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.