செங்குன்றம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.;

Update: 2023-02-15 09:01 GMT

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலை அம்மன் நகர் எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 32). இவர் செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி அனுசுயா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர் மது போதைக்கு அடிமை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சோழவரம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக் குமார் உடலை மீட்டு பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்