விழுப்புரத்தில்ரெயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை

விழுப்புரத்தில் ரெயில்முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-26 18:45 GMT


விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனியை சேர்ந்தவர் சுஜாத்அலி (வயது 38). திருச்சி கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், தற்போது விழுப்புரத்தில் உள்ள ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். திருமணம் ஆகாதவர் ஆவார்.

நேற்று இரவு திடீரென்று விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே சுஜாத் அலி சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற பயணிகள் ரெயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

காரணம் என்ன?

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுஜாத் அலி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரெயில்நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்