கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 63). கூரை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு கண் பார்வை தெரியாத நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவாறு புகைபிடித்தார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் ராமமூர்த்தி தீயில் கருகி பலியானார். தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.