வீட்டுக்கு குடிநீர்குழாய் இணைப்பு கேட்டுமேல்நிலைதொட்டியில் ஏறிமுதியவர் தற்கொலை மிரட்டல்

தீத்தாம்பட்டி கிராமத்தில் வீட்டுக்கு குடிநீர்குழாய் இணைப்பு கேட்டுமேல்நிலைதொட்டியில் ஏறிமுதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-11-24 18:45 GMT

கொப்பம்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் குடியிருப்பவர் சங்குமணி பிள்ளை (வயது 80). இவர் நேற்று காலை 7 மணி அளவில் கையில் விஷப் பாட்டிலுடன் திடீரென்று மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த

கொப்பம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசாரும், கோவில்பட்டி தீயணைப்பு படை அதிகாரி அருள்ராஜ் தலைமையில் வீரர்களும் விரைந்து வந்தனர். அவர்கள் மேல்நிலை தொட்டியில் இருந்து சங்கு மணிப்பிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் தன்னுடைய வீட்டிற்கு குடிநீர்குழாய் இணைப்பு கொடுக்காததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார். உடனடியாக அங்கு பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி வரவழைக்கப்பட்டார். அவர் குடிநீர்குழாய் இணைப்புக்கு டெபாசிட் தொகை ரூ.1,206 செலுத்தினால் உடனடியாக இணைப்பு கொடுப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவரது மகன் சங்குமணிப்பிள்ளை வீட்டு டெபாசிட் ெதாகையை செலுத்தினார். இதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கியது.

பின்னர் மேல்நிலைத் தொட்டியில் இருந்த சங்குமணிப் பிள்ளையை பாதுகாப்பாக தீயணைப்பு துறையினர் கீழே இறக்கினர். அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்