வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
குத்தாலம் அருகே வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குத்தாலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் மேற்பார்வையாளர் கலையரசி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், கோனேரிராஜபுரம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவர் நூருல்ஹக் மற்றும் வக்கீல் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வளர் இளம் பெண்களுக்கு ரத்த சோகை என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?, அதனை தடுப்பது எப்படி? என்று எடுத்து கூறினர். மேலும், பெண்களுக்கான சட்டங்கள், குழந்தைகள் பாதுகாப்பு, யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. முடிவில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர், ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.