கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீ விபத்துகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

Update: 2023-08-04 19:21 GMT


தீ விபத்துகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தீ விபத்துகள் தடுப்பு மற்றும் மீட்புபணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அ.முகமதுசாதிக் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பி.அருண்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் தீயணைப்புதுறை அதிகாரி பி.பாஸ்கரன் கலந்து கொண்டு தீ விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பேசினார். கலவை தீயணைப்பு நிலைய வீரர்கள் மாணவ- மாணவிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்