மனித- வனவிலங்கு மோதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

மனித- வனவிலங்கு மோதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Update: 2022-09-25 18:45 GMT

கோத்தகிரி

வனத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோத்தகிரி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் கலந்துக் கொண்டு வன விலங்குகளால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், மனித வன விலங்குகள் தாக்குதல் ஏற்பாடமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பாடல், நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி மற்றும் கட்டபெட்டு வனசரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்