மஞ்சப்பை வழங்க தானியங்கி எந்திரம் வந்தாச்சு....

மஞ்சப்பை வழங்க தானியங்கி எந்திரம் வந்தாச்சு....

Update: 2023-05-20 18:45 GMT

கோவை

தமிழக அரசின் சார்பில் ஒருமுறை மட்டும் பயன்ப டுத்தும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட மஞ்சப்பை பயன்படுத்துவதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட் டுள்ளது. விரைவில் இந்த எந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:-

"பொது மக்களிடம் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும். ஒரு பையின் விலை ரூ.10. எந்திரத்தில் ரூ.10 நாணயம் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளை செலுத்தி, தேவையான எண்ணிக்கையை குறிப் பிட்டு பையை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால், இதில் மீதி சில்லரையை பெற முடியாது."க்யூ ஆர் கோடு "வசதியும் உள்ளது. ஜி-பே, பரிவர்த்தனைகள் மூலமும் ஸ்கேன் செய்து தொகையை செலுத்தி பையை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்