எலக்ட்ரானிக் ஷோரூமில் புகுந்து ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி

திருப்பத்தூரில் மனைவியின் கள்ளக்காதலுக்கு காரணமாக இருந்ததாக எலக்ட்ரானிக் ஷோரூமில் புகுந்து ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-13 12:20 GMT

திருப்பத்தூரில் மனைவியின் கள்ளக்காதலுக்கு காரணமாக இருந்ததாக எலக்ட்ரானிக் ஷோரூமில் புகுந்து ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல்

திருப்பத்தூர் டவுன் கவுதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 28), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விக்னேஷ்வரி (23). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. விக்னேஸ்வரி திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் ஷோரூமில் வேலைபார்த்து வந்தார். அதே ஷோரூமில் பணிபுரியும் தாதலள்ளி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (28) என்பவருக்கும், விக்னேஸ்வரிக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இது விக்னேஸ்வரியின் கணவர் சவுந்தரபாண்டியனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கும் தினேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து விக்னேஸ்வரி, தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் நிர்வாகம் வேலையை விட்டு நீக்கி விட்டது.

வெட்டி கொல்ல முயற்சி

இந்த நிலையில் சவுந்தரபாண்டியன், தனது மனைவிக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட அதே ஷோரூமில் பணிபுரிந்து வரும் பாச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்த அகிலன்தான் (21) காரணம் எனக்கருதினார். இதனால் ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டியன் கத்தியை எடுத்துக்கொண்டு ஷோரூமிற்கு சென்றார்.

அங்கு பணியில் இருந்த அகிலனை ஓட ஓட விரட்டு வெட்டினார். இதில் அகிலனுக்கு வலது கை மற்றும் மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் கடையில் இருந்து வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர் கைது

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எலக்ட்ரானிக் ஷோரூமில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்