திருவெண்ணெய்நல்லூர் அருகேஅரசு பள்ளிக்குள் புகுந்து திருட முயற்சிஅண்ணன்-தம்பி கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து திருட முயன்ற அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-12 18:45 GMT


திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்ல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று மாலையில் இந்த பள்ளியின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த 2 பேர் திருட முயன்றனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பள்ளிக்குள் சென்றனர். அதற்குள் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது பள்ளிக்குள் நுழைந்த 2 பேரும், அங்கிருந்த 6 மின்விசிறிகள், குடிநீர் மோட்டார், தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரம், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை மூட்டைகளாக கட்டி திருட முயன்றதும், பொதுமக்கள் வருவதை பார்த்ததும், மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அதில், பொதுமக்கள் தெரிவித்த அடையாளத்தின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், வடமருதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் காந்தி (வயது 24), தினேஷ் (20) ஆகியோர் இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்