பணியில் இருந்த ராணுவ அதிகாரி திடீர் மரணம்
திருமங்கலத்தில் பணியில் இருந்த ராணுவ அதிகாரி திடீர் மரணம் அடைந்தார்.
திருமங்கலம்,
திருமங்கலம் மறவன்குளம் மாரியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன் (வயது 33). ராணுவ அதிகாரியாக தற்போது அசாமில் பணியாற்றி வந்தார். பணியில் இருந்த போது அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்த தகவல் அசாமில் இருந்து திருமங்கலத்தில் உள்ள அவருடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் அவரது உடல் திருமங்கலம் வந்தது. வருவாய்த் துறை அதிகாரிகள் உடலை பெற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தனர். பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு முறையான அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.