விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி மறுத்தால் மேல்முறையீடு செய்யலாம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
கோவை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
மேல்முறையீடு
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தற்காலிகமாக விநாய கர் சிலைகளை நிறுவுவதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறை கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட துறைக ளில் பெற வேண்டிய ஆட்சேபனை இன்மை கடிதத்துடன், மாநகர் பகுதி என்றால் போலீஸ் உதவி கமிஷனரிடமும், பிற இடங்களில் சப்-கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியரி டம் படிவம்-1 ல் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்ற பின்னர் சிலைகள் நிறுவப்பட வேண்டும்.
இவ்வாறு நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு பூசப்பட்ட வகைகளாகவும் இருக்க வேண்டும். சிலைகள் வைக்க அனுமதி கேட்கும் விண்ணப் பம் சப்-கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியர், போலீஸ் உதவி கமிஷனரால் நிராகரிக்கப்பட்டால் கலெக்டர் அல்லது போலீஸ் கமிஷனரிடம் மேல்முறையீடு விண்ணப்பம் அளிக்கலாம்.
சிலைகள் கரைப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி முத்தண்ணன் குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம், சுப்ரமணி யர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோ ணம் ஆறு, சிறுமுகை பழத்தோட்டம், சாடிவயல், வாளையார் அணை, ஆத்துப்பாறை, ஆழியாறு, குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளம், வெள்ளக்கிணறு குளம், நாகராஜ புரம் குளம் ஆகிய இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.
மேலும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.