'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலி நாளை வெளியீடு

அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-09-16 13:44 GMT

சென்னை.

'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.வேலூரில் நாளை தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது.இந்த விழாவில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த செயலியில் திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றியவிரிவான தகவல்கள் , அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்