போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பிராணிகள் நல ஆர்வலர்
13 மாடுகளுடன் வந்த வேனை போலீஸ் நிலையத்தில் பிராணிகள் நல ஆர்வலர் ஒப்படைத்தார்.
விருதுநகர்-மதுரை சாலையில் சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடி அருகே ஒரு வேனில் 13 மாடுகள் திண்டுக்கல்லில் இருந்து மேலப்பாளையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த பிராணிகள் நல ஆர்வலர் சுனிதா கிறிஸ்டி 13 மாடுகளுடன் வந்த வேனை விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து போலீசார் 2 கன்றுகளை மட்டும் போலீஸ் நிலையத்தில் வைத்து விட்டு மாடுகளை அந்த வேனில் அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாகிறிஸ்டி தனக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் மாடுகளுடன் வேனை போலீசார் அனுப்பி விட்ட நிலையில் பிராணிகள் நல அமைப்பின் தலைமையிடத்திற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.