ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் கூடுதலாக ரூ.250 அபராதம்

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் கூடுதலாக ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது.;

Update: 2023-04-19 19:23 GMT

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நீண்ட தூர ரெயில்களில், முன்பதிவு டிக்கெட் எடுக்காமல் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அமர்ந்து செல்வதால், பணம் செலுத்திய பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண, ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளை முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்து இறக்கி, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏற வழிகாட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஒரு பயணி ரெயிலில் இருந்தாலோ அல்லது இறங்கியிருந்தாலோ, டிக்கெட் பரிசோதகர் பரிசோதனை செய்யும் போது அவரது பாஸ் அல்லது டிக்கெட்டை வழங்க வேண்டும். டிக்ெகட் இல்லாமல் பயணம் செய்யும் பயணி டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.250 வரை அபராதம் செலுத்த வேண்டும். ஒரு பயணி டிக்கெட் அல்லது ரெயில் பாஸ் பெற்றதை விட உயர் வகுப்பில் ரெயிலில் பயணம் செய்தால் அல்லது பயணம் செய்ய முயற்சித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த பயணி உரிய கட்டணத்தை செலுத்த மறுத்தால், உரிய தொகையை திரும்பப் பெறுவதற்காக ரெயில்வே மாஜிஸ்திரேட்டிடம் பயணி மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்