ஆனைமலை
பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தென்னைநார் தொழிற்சாலை வளாகத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் சந்தானம் என்பவருடன் வனத்துறையினர் அந்த தொழிற்சாலைக்கு விரைந்து வந்தனர். பின்பு அங்கு பதுங்கி இருந்த சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.