8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது;
ஆம்பூர்
ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய வீட்டின் அருகில் ஒரு மலைப்பாம்பு இருந்தது. மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.