11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
கடையத்தில்11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
கடையம்:
கடையம் ஜம்புநதி ஆற்றில் 100 நாள் திட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்று ஓரமுள்ள புதரில் மலைப்பாம்பு கிடந்தது. இதை பார்த்து பணியாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
இதுகுறித்து உடனடியாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு புதரில் பதுங்கி இருந்த சுமார் 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பு கடையம் ராமநதி பீட் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.