பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

Update: 2023-01-03 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10-ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்த பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண், வருகை சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். escholarship.tn.gov.in என்ற கல்வி இணையதளம் வழியாக பள்ளிகள் அல்லது கல்லூரிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலமாகவும், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை பெற வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாகவும் விண்ணப்பித்து தர்மபுரி மாவட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்