குன்னூர் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 2 பெண்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

குன்னூர் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 2 பெண்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2023-10-03 21:19 GMT

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் ஊட்டிக்கு தனியார் பஸ்சில் சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்கிருந்து திரும்பிய போது குன்னூர் மலைபாதையில் பஸ் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 9 பேர் உயிர் இழந்தார். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஊட்டி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோமதி (வயது 57), சண்முகத்தாய் (48) ஆகியோரின் உறவினர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி கோமதி, சண்முகத்தாய் ஆகிய 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு அவர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்