அ.ம.மு.க. வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கயத்தாறு அருகே அ.ம.மு.க. வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-06-09 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே பரும்புகோட்டை கிராமத்தை சேர்ந்த அ.ம.மு.க. கயத்தாறு கிழக்கு ஒன்றிய எம்.ஜி. ஆர்.இளைஞரணி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் என்ற விஜய் மற்றும் 15 பேர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், இணைச்செயலாளர் நீலகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்