அ.ம.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-13 18:57 GMT

புவனகிரி, 

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பரங்கிப்பேட்டை ராமமோகன் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார்.

கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி முருகன், மத்திய மாவட்ட செயலாளர் பக்தரட்சகன், கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

இதில் அ.ம.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்