அ.ம.மு.க. பொதுக் கூட்டம்
கழுகுமலையில் அ.ம.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது.;
கழுகுமலை:
கழுகுமலையில் அ.ம.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் ஜெயலலிதாவின் 75- வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கழுகுமலை காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சி துணை பொதுச்செயலாளரும், கயத்தாறு யூனியன் தலைவருமாந எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். கழுகுமலை நகர செயலாளர் கோபி வரவேற்றார். கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன் பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் ஈஸ்வரபாண்டியன் மற்றும் கிளை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.