கழிவுநீர் தேங்கும் இடத்தில் அம்மா உணவகம்

கழிவுநீர் தேங்கும் இடத்தில் அம்மா உணவகம்

Update: 2022-09-20 18:36 GMT


ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு பெரிய ஆஸ்பத்திரி வளாகத்தில் என 2 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் மிக குறைந்த விலையில் காலை மற்றும் மதிய நேரங்களில் உணவு வழங்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மாதம் ரூ.10 லட்சத்திற்கு மேல் செலவிட்டு வருகிறது. காலை 7 முதல் 10 மணி வரை ரூ.1-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை, ரூ.5-க்கு பொங்கல் மற்றும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. மதியம் ரூ.5-க்கு தக்காளி சாதம், சாம்பார் சாதம், லெமன் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் மற்றும் கீரை, ஊறுகாய் வழங்கப்படுகிறது.

இந்த 2 அம்மா உணவகங்களிலும் 24 பெண் பணியாளர்கள் தினமும் ரூ.250 சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தினமும் ஆயிரம் பேர் வரை சாப்பிடுகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்படும் அம்மா உணவகம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

குறைந்த விைலயில் சாப்பாடு

இங்கு உணவருந்தும் கட்டுமான தொழிலாளர் வீரா, நயினார்கோவிலை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-

அம்மா உணவகத்தில்தான் தினமும் சாப்பிடுகிறோம். குறைந்த விைலயில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது என்றனர்.

அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர் மங்கை:-

இங்கு பெரும்பாலும் கட்டுமான தொழிலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள், ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள நோயாளிகளின் உறவினர்கள் சாப்பிட வருகின்றனர். காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் கார்மேகம் ஆகியோர் இங்கு அவ்வப்போது வந்து உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்துகின்றனர் என்றார்.

கீழக்கரை

கீழக்கரை நகராட்சியில் பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து விட்டது. காலை, மதியம் நேரங்களில் கூடுதல் வகை உணவுகள் பரிமாறினால் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

பரமக்குடி அம்மா உணவகம்

ஏழை, எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 24.5.2015-ம் ஆண்டு பரமக்குடி பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரை அந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் காலையில் இருந்து மதியம் வரை 6 பெண்களும் மதியம் முதல் மாலை வரை 6 பெண்களும் வீதம் மொத்தம் 12 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பவானி, முத்துெலட்சுமி ஆகியோர் கூறியதாவது:-

பரமக்குடி அம்மா உணவகம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இவர்களின் பசிைய தீர்த்து வைக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் இந்த அம்மா உணவகம் நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றனர்.

சமீப காலமாக அம்மா உணவகங்களில் சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் தரமான, பல வகையான உணவு வகைகளை வழங்கினால் ஏழை, எளிய மக்களுக்கு பயன் உடையதாக இருக்கும். கூடுதல் வாடிக்கையாளர்கள் அம்மா உணவகத்திற்கு வர தொடங்குவார்கள் என ெபாதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்