வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா

ேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-07-30 16:28 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வேதநாயகி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக சப்பரம் சென்றது. இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள், ஓதுவார்மூர்த்திகள் மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்