வடகாடு அருகே அம்மன் கோவில் தேரோட்டம்
வடகாடு அருகே அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.;
வடகாடு அருகேயுள்ள அணவயல் தாணான்டி அம்மன் கோவிலில் கடந்த 11-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதில் நாள்தோறும் இரவில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் வாணவேடிக்கை முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இவ்விழாவில் அணவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.