அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சேலைக்காரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-02-08 19:47 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிப்பிப்பாறை ஊராட்சி வால்சாபுரம் கிராமத்தில் சேலைக்காரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றன. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பரிவார தெய்வங்களான கருப்பசாமி, விநாயகர் கோவிலில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். 

Tags:    

மேலும் செய்திகள்