அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கேதார கவுரி விரதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Update: 2022-10-25 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் கேதார கவுரி விரதத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கேதார கவுரி விரதம்

கேதார கவுரி விரதம் என்பது கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் பிரியாமல் இறுதி வரை மகிழ்வுடன் வாழ கடைபிடிப்பதாகும். இந்த விரதத்தை கடைபிடிக்கும் கணவன், மனைவி இருவரும் லட்சிய தம்பதிகளாக வாழ்வார்கள். தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ அல்லது மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, சிவபெருமானை தொடர்ந்து 21 நாட்களுக்கு ெபண்கள் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று, கேதார கவுரி விரதத்தையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் சென்னை சாலை பெரிய மாரியம்மன் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள பிரசன்ன பார்வதி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அங்காளம்மன் கோவில்

இதேபோல் கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதிவிநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தை கொண்டு சென்று அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர்.

மாவட்டம் முழுவதும்

பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபடுவது வழக்கம். ஆனால் நேற்று மாலை சூரிய கிரகணம் தோன்றுவதையொட்டி, பகல் 11 மணி முதல் பெண்கள் கோவிலுக்கு சென்று அதிரசம் படைத்து வழிபட்டு சென்றனர். இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்