மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தண்ணீர் பிரச்சினை எக்காரணம் கொண்டும் வரக்கூடாது என்பதற்காக மீனாட்சி அம்மனே, தண்ணீர் பந்தலில் இருந்து பக்தர்களுக்கு குடிநீர் கொடு்ப்பதாக தத்ரூபமாக செய்யப்பட்டு இருந்த அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது.